டெஸ்ட் போட்டியில் விளையாடுவது எனது கனவு- யுஸ்வேந்திர சஹால்!
டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டும் என்பதே என்னுடைய நீண்டகால கனவாகும் என்று இந்திய அணியின் அனுபவ சுழற் பந்துவீச்சாளர் சஹால் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. ஜூலை 12ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியை விளையாடவிருக்கும் இந்திய அணி இந்த தொடருக்கான முன்னேற்பாடுகளை பிசிசிஐ தயார்செய்து வருகின்றன.
இதனால் இந்த தொடர் குறித்தான முக்கியமான விஷயங்களை முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களுக்கு மத்தியில் விவாதித்து வருகின்றனர் மேலும் இந்த தொடரில் எந்த வீரர்களுக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணிக்கு வெற்றி கிடைக்கும் என்பது போன்ற கருத்துக்களையும் தெரியப்படுத்தி வருகின்றனர்.
Trending
அந்த வகையில் இந்திய அணியின் அனுபவ சுழற் பந்துவீச்சாளர்களில் ஒருவரான சஹால், தனக்கு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாட வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாகவே உள்ளது என்றும் தான் ஒரு டெஸ்ட் கிரிக்கெட்டர் என்று சொல்லிக் கொள்ளவேண்டும் என்றும் செய்தியாளர்களின் சந்திப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய யுஸ்வேந்திர சஹால் ,“ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் சர்வதேச அளவில் தன்னுடைய நாட்டிற்காக தன்னுடைய அணிக்காகவும் விளையாட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவர்கள் அந்த உச்சத்தை அடைந்து தனது அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தால் அந்த சந்தோஷமே வேறு. எனக்கும் அதே போன்ற ஆசை உள்ளது. நான் லிமிடெட் ஓவர் போட்டிகளில் அதிகமாகவே சாதித்து விட்டேன்.
ஆனால் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது இன்னும் என்னுடைய ஆசைகளில் ஒன்றாக உள்ளது. என்னுடைய பெயருக்கு பின்னால் நான் டெஸ்ட் கிரிக்கெட்டர் என்ற பட்டம் இருக்க வேண்டும் என்பது எனக்கு நீண்ட நாள் கனவாகும் இதனால் உள்ளூர் போட்டிகளில் குறிப்பாக ரஞ்சிப் போட்டிகளில் என்னுடைய முழு திறமையை வெளிப்படுத்துகிறேன். நிச்சயம் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பேன் என நம்புகிறேன், ஆனால் அணியில் தேர்வாவது என்பது நம்முடைய கையில் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now