
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு உலக கோப்பைக்கு நிகரான முக்கியமான தொடர் ஆஷஸ் டெஸ்ட் தொடர். 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் இரு அணிகளுக்கும் இடையே களத்தில் அனல் பறக்கும். இரு அணிகளுமே ஆஷஸ் தொடரை வெல்ல கடுமையாக போராடும்.
அதன்படி 2019 ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. அந்த தொடர் டிராவில் முடிந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் நடக்கும் 2021-2022 ஆஷஸ் தொடரை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் உள்ளன.
ஆஷஸ் தொடருக்கான 17 வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் முழங்கை காயம் காரணமாக இந்த அணியில் இடம்பெறவில்லை. பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட்டிலிருந்து தற்காலிக ஓய்வில் இருப்பதால் அவரும் அணியில் இடம்பெறவில்லை. காயம் காரணமாக ஐபிஎல்லில் இருந்து பாதியில் வெளியேறிய சாம் கரனும் ஆஷஸ் தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை.