ஒருகிணைந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்த பிராட்; சுப்மன், ஜடேஜாவுக்கு இடமில்லை!
இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடர் 2-2 என சமனில் முடிந்த நிலையில், முன்னாள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், இரு அணிகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த டெஸ்ட் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார்.

Stuart Broad Picks Combined paying XI: ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடர் 2-2 என டிராவில் முடிந்த நிலையில், முன்னாள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் இரு அணிகளின் ஒருங்கிணைந்த பிளேயிங் லெவனை தேர்ந்தெடுத்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்துள்ளது. இதில் முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியும் வெற்றிபெற்ற நிலையில் மூன்றாவது போட்டி டிராவானது. அதன்பின் 4ஆம் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், 5வது டெஸ்டில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன் தொடரையும் சமன்செய்து அசத்தியது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் இரு அணிகளின் ஒருகிணைந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார். அவர் தேர்ந்தெடுத்துள்ள இந்த அணியில் தொடக்க வீரர்களாக இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ரகுலை தேர்வு செய்துள்ளார். இதில் ஜெய்ஸ்வால் 411 ரன்கள் (சராசரி 41.10) மற்றும் ராகுல் 532 ரன்களை (சராசரி 53.20) எடுத்ததுடன், இருவரும் தலா 2 அரைசதங்கள் மற்றும் 2 சதங்களையும் விளாசியுள்ளனர்.
அதன்பின் மூன்றாம் வரிசையில் இங்கிலாந்தின் ஒல்லி போப்பையும், நான்காம் இடத்தில் ஜோ ரூட்டையும், ஐந்தாம் இடத்தில் ஹாரி புரூக்கையும் தேர்வு செய்துள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் இவர்கள் மூவரின் செயல்பாடுகளும் சிறப்பாக இருந்தது. மேலும் இத்தொடரில் ஜோ ரூட் 537 ரன்களையும், புரூக் 481 ரன்களையும், போப் 306 ரன்களையும் எடுத்துள்ளனர். மேலும் அணியின் விக்கெட் கீப்பராக இந்தியாவின் ரிஷப் பந்திற்கு வாய்ப்பளித்துள்ளார்.
இதுதவிர்த்து அணியின் ஆல்ரவுண்டர்களாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியின் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கிய பிராட், அணியின் பந்துவீச்சாளர்களாக இங்கிலாந்தின் ஜோஃப்ரா ஆர்ச்சர், இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோரைச் சேர்த்துள்ளார். இருப்பினும் அவர் தேர்ந்தெடுத்துள்ள இந்த அணியில் சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, பென் டக்கெட் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்காதது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Also Read: LIVE Cricket Score
ஸ்டூவர்ட் பிராட் தேர்வு செய்த ஒருங்கிணைந்த பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், ஜோஃப்ரா ஆர்ச்சர், முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.
Win Big, Make Your Cricket Tales Now