
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக செஞ்சூரியனில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 245 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் 50 ரன்கள் கூட தாண்டாத நிலையில் கேஎல் ராகுல் சதமடித்து 101 ரன்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ககிஸோ ரபாடா 5 விக்கெட்களை சாய்த்தார்.
அதை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆபிரிக்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2ஆவது நாள் முடிவில்5 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்து இந்தியாவை விட 11 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அந்த அணிக்கு அதிகபட்சமாக அனுபவ வீரர் டீன் எல்கர் சதமடித்து 140 ரன்கள் எடுத்துள்ள நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா, சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.
முன்னதாக இந்த போட்டியில் டோனி டீ ஸோர்ஸி – டீன் எல்கர் ஆகியோர் சேர்ந்து 2ஆவது விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு பெரிய தொல்லை கொடுத்தனர். அப்போது பும்ரா வீசிய 29ஆவது ஓவரின் 4ஆவது பந்துக்கு முன்பாக தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த நிலையில் விராட் கோலி ஸ்டம்ப் மீதிருந்த பெய்ல்ஸை மாற்றி வைத்தார்.