
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பும்ரா 10-ஆவது வீரராக களமிறங்கி 16 பந்துகளை சந்தித்த நிலையில் 2 சிக்ஸர் மற்றும் நான்கு பவுண்டரி என அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 31 ரகளை சேர்த்தார்.
அதிலும் குறிப்பாக ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரு ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகளுடன் 35 ரன்கள் அடித்து பும்ரா உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் பிராட் ஓவரில் யுவராஜ் சிங் 6 சிக்ஸர்கள் அடித்ததை தொடர்ந்து தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவரது ஒரே ஓவரில் 35 ரன்கள் சென்றுள்ளது ஒரு மோசமான சாதனையாக மாறியுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை 550 விக்கெட்டுகள் வீழ்த்திய அனுபவம் வாய்ந்த வீரராக இருக்கும் பிராட் இப்படி ஒரு மோசமான சாதனையை செய்துள்ளது சற்று வருத்தமான விடயம் தான். இந்நிலையில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய இந்த ஓவர் குறித்தும் பும்ரா அந்த ஓவரில் விளையாடியது குறித்தும் தற்போது பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளத்தில் உலா வரும் வேளையில் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரும், பிராட்டின் சக நண்பருமான ஜேம்ஸ் ஆண்டர்சன் ஸ்டூவர்ட் பிராட் வீசிய அந்த ஓவர் குறித்து தற்போது பேசியுள்ளார்.