
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது பிப்ரவரி 19 முதல் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இதனைய்டுத்து இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இந்திய அணியும் விரைவில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியை அறிவிக்கும் எனத் தெரிகிறது. இதில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதிலும் குறிப்பாக சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பராக யார் இடம்பெற வேண்டும் என்பது கவனம் பெற்றுள்ளது. ஏனெனில் இந்த பட்டியலில் சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பந்த் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் இவர்களில் யாருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் முன்னாள் இந்திய வீரர்கள் சுனில் கவாஸ்கர் மற்றும் இர்ஃபான் பதான் ஆகியோர் இத்தொடருக்கான தங்களது இந்திய அணியைத் தேர்ந்தெடுத்துள்ளார். இந்த அவர் சஞ்சு சாம்சன், நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கும் இடம் கொடுத்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று இந்த இரண்டு முன்னாள் வீரர்களும் விரும்புகின்றனர்.