
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
அதன்படி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. இதனையடுத்து இந்திய அணிக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
மேற்கொண்டு சமீப காலங்களில் இந்திய அணி சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்து வருவதுடன், உலகின் தலைசிறந்த அணியாகாவும் பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் சிறந்த வீரர்களை உள்டக்கிய ஒருநாள் அணியை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார். மேலும் சுனில் கவாஸ்கர் தேர்வு செய்துள்ள இந்த அணியின் கேப்டனாக இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான எம்எஸ் தோனியைத் தேர்வு செய்துள்ளார்.