
Sunil Gavaskar opens up on Virat Kohli's poor form (Image Source: Google)
ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இதையொட்டி இந்திய அணி பல்வேறு வீரர்களை டி20 உலகக் கோப்பைக்காக தயார்படுத்தி வருகிறது.
இந்நிலையில் அண்மை காலமாக மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக ரன் சேர்க்க முடியாமல் தவித்து வரும் விராட் கோலிக்கு உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்காமல் கூட இருக்கலாம் என முன்னாள் வீரர்கள் சூசகமாக கூறிவருகின்றனர்.
எனினும் விராட் கோலிக்கு ஆதரவாக பேசியுள்ள கேப்டன் ரோகித் சர்மா, ஒரு வீரர் 10 ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடும் போது ஒரு தொடரை வைத்தோ, இல்லை ஒரு சில மாதங்களை வைத்தோ முடிவு எடுக்க கூடாது என்று கூறி விமர்சகர்களின் வாயை அடைத்துள்ளார்.