
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மொஹாலியில் தொடங்கவுள்ளது. கடைசியாக விளையாடிய தென் ஆப்பிரிக்க தொடரில் தோல்வியடைந்ததால், இதில் வெற்றி பெற இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனார்.
இந்த முறை சீனியர் வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ரிஷப் பந்த் ஆகியோர் மீண்டும் அணிக்குள் இணைந்துள்ளனர். இந்த மூவர் கூட்டணி தான் ப்ளேயிங் லெவனிலும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பும்ராவுக்கு இந்த போட்டியில் சர்ஃப்ரைஸ் காத்துள்ளதாக கவாஸ்கர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பும்ரா இரண்டு முறையாவது 5 விக்கெட் ஹால் எடுப்பார் என நம்பிக்கை உள்ளது. இதில் ஆச்சரியப்படுவதற்கு இடமே இல்லை. ஏனென்றால் அந்த களத்தின் தன்மை அப்படி இருக்கும் குறிப்பாக பும்ராவின் திறமை மிகவும் அற்புதமானது.