WTC 2023: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த சுனில் கவாஸ்கர்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கனித்துள்ளார்.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-2023 இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இந்த இறுதிப்போட்டி தொடங்குகிறது. கடந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் தோற்று கோப்பையை இழந்த இந்திய அணி இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய உலகின் வலுவான 2 அணிகள் இறுதிப்போட்டியில் மோதுவதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும். இந்த போட்டியில் ஜெயித்து கோப்பையை வெல்ல இந்திய அணி களமிறக்க வேண்டிய ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் சுனில் கவாஸ்கர்.
Trending
கேப்டன் ரோஹித் சர்மாவுடன் ஷுப்மன் கில்லை தொடக்க வீரராக தேர்வு செய்துள்ளார். அதன்பின்னர் புஜாரா, கோலி, ரஹானே என்பது வழக்கமான பேட்டிங் ஆர்டர். விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத்தை தேர்வு செய்துள்ளார். அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் ஸ்பின்னர்கள். ஷமி, சிராஜ், ஜெய்தேவ் உனாத்கத், ஷர்துல் தாகூர் ஆகியோரை ஃபாஸ்ட் பவுலர்களாக தேர்வு செய்துள்ளார் கவாஸ்கர்.
கவாஸ்கர் தேர்வு செய்த இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ஜெய்தேவ் உனாத்கத், முகமது ஷமி, முகமது சிராஜ்.
Win Big, Make Your Cricket Tales Now