Advertisement

மோஹித் சர்மாவை ஹர்திக் பாண்டியா தொந்தரவு செய்தது ஏன்? - ஹர்திக் பாண்டியா!

சென்னை அணியுடனான இறுதி போட்டியின் கடைசி ஓவரின் போது பந்துவீச்சாளர் மோஹித் சர்மாவை, கேப்டன் ஹர்திக் பாண்டியா தொந்தரவு செய்து கொண்டே இருந்தது ஏன் என முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement
Sunil Gavaskar Questions Hardik Pandya's Final Over Decision!
Sunil Gavaskar Questions Hardik Pandya's Final Over Decision! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 31, 2023 • 02:00 PM

16ஆவது ஐபிஎல் தொடரில், குஜராத் அணியுடனான முதல் போட்டியிலேயே தோல்வியடைந்து, தோல்வியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரை தொடங்கின. பந்துவீச்சில் போதிய பலம் இல்லாத சென்னை அணியால் இந்த முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கே தகுதி பெற முடியாது என்பதே பல கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்தாக இருந்தது. ஆனால் இரண்டாவது அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய சென்னை அணி, முதல் அணியாக இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 31, 2023 • 02:00 PM

இறுதி போட்டியில் குஜராத் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வழக்கம் போல் பந்துவீச்சு, பீல்டிங்கில் கடுமையாக சொதப்பினாலும், ஜடேஜா, கான்வே, கெய்க்வாட் போன்ற வீரர்களின் நம்பிக்கையான பேட்டிங்கால், கடைசி பந்து வரை பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 5ஆவது முறையாக ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தையும் கைப்பறியது.

Trending

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த மிரட்டல் கிரிக்கெட் வட்டாரத்தின் தற்போதைய ஹாட் டாப்பிக்காக இருப்பதால், முன்னாள், இந்நாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் சென்னை அணியின் வெற்றி குறித்தான தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், சென்னை – குஜராத் இடையேயான இறுதி போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் கடைசி ஓவரின் போது பந்துவீச்சாளர் மோஹித் சர்மாவை, கேப்டன் ஹர்திக் பாண்டியா தொந்தரவு செய்து கொண்டே இருந்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில், “கடைசி ஓவர் வரை போட்டியின் முடிவு குஜராத் அணியின் பக்கம் தான் இருந்தது. கடைசி ஓவரின் முதல் நான்கு பந்துகளையும் மோஹித் சர்மா மிக மிக சிறப்பாகவே வீசினார். மோஹித் சர்மா தனது வேலையை சரியாக செய்து கொண்டிருந்த போது, தீடீரென அவருக்கு தண்ணீர் பாட்டில் அனுப்பப்பட்டது ஏன்.? ஹர்திக் பனடியா எதற்காக மோஹித் சர்மாவிடம் பேசி கொண்டே இருந்தார் என்பது எனக்கு புரியவில்லை. 

அழுத்தம் நிறைந்த கடைசி ஓவரை வீசுவது சாதரண விசயம் கிடையாது, அதை ஒருவர் சரியாக செய்து கொண்டிருக்கும் போது, எதற்காக அவரை தொந்தரவு செய்து அவரது கவனத்தை கலைக்க வேண்டும். இது எந்த வகையில் பலன் தராது. தூரத்தில் நின்று கொண்டு மோஹித் சர்மாவை ஊக்கப்படுத்தலாமே தவிர வேறு எதுவும் பந்துவீச்சாளரிடம் சொல்ல கூடாது. மோஹித் சர்மாவின் கவனமும், திட்டமும் இந்த இடத்தில் தான் தடுமாறியதாக நான் பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement