Advertisement

ஆசிய கோப்பை 2022: அவர்கள் இப்படி செய்திருக்க கூடாது - சுனில் கவாஸ்கர்!

சிறிய தவறால் ரோஹித் மற்றும் விராட் கோலி இருவருமே அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இவர்களின் ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement
Sunil Gavaskar questions Rohit Sharma, Virat Kohli’s shot selection vs Pakistan – Both got out to fo
Sunil Gavaskar questions Rohit Sharma, Virat Kohli’s shot selection vs Pakistan – Both got out to fo (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 29, 2022 • 05:50 PM

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan
August 29, 2022 • 05:50 PM

இந்த போட்டியில் சிறிய தவறால் ரோஹித் மற்றும் விராட் கோலி இருவருமே அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இவர்களின் ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

Trending

இதுகுறித்து பேசிய கவாஸ்கர், “ராகுல் ஒரே ஒரு பந்தைதான் எதிர் கொண்டனர். அதனால் எதையும் தீர்மானிக்க முடியாது. ரோஹித்தும் கோலியும் சிறிது நேரம் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் கணிசமான ரன்களைப் பெற்றனர். இதற்கு முன்பு கோலியின் ஃபார்ம் பற்றி மக்கள் பேசும் போது அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று கூறிக்கொண்டே இருந்தேன். ஆனால் இந்த போட்டியில் அவருக்கு அதிர்ஷ்டம் இருந்தது. கேட்ச் தவறியது. நிறைய இன்சைட் எட்ஜ்கள் என வந்த போதும் நல்ல ஷாட்கள் நிறைய ஆடினார்.

கோலி - ரோஹித் தங்களுக்கு கிடைத்த சிறப்பான தொடக்கத்தை 60 - 70 ரன்களுக்கு மாற்றியிருக்க வேண்டும். ஆனால் மோசமான ஷாட்களால் சொதப்பினர். அது போன்ற சூழலில் பெரிய ஷாட்கள் தேவையே கிடையாது. ரன் ரேட் 19 - 20 என தேவைப்பட்டிருந்தால் சிக்ஸர் அடிக்கலாம்.

ஆனால் குறைந்த ரன்ரேட்டில் இப்படி செய்திருக்க கூடாது. ஒருவேளை 70 - 80 ரன்களை அவர்கள் அடித்திருந்தால் சிக்ஸருக்கு சென்றிருக்கலாம். இனி வரும் போட்டிகளில் இதனை கற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement