
இந்திய அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. தொடரின் முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்திடம் படு தோல்வியைத் தழுவியது. இதனையடுத்து, இந்திய அணி அடுத்ததாக அஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.
அதன்படி ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது வரும் நவம்பர் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. கடும் நெருக்கடிக்கு மத்தியில் இந்திய அணி இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய அணி பங்கேற்க இருந்த பயிற்சி போட்டியை பிசிசிஐ ரத்து செய்வதாக அறிவித்தது, பெரும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் பிசிசிஐ-ன் இந்த முடிவை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்திய கிரிக்கெட்டின் நலனுக்காக, பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்து, ஆஸ்திரேலிய லெவன் அணிக்கு எதிராகை இரண்டு நாள்கள் கொண்ட போட்டியை நடத்த திட்டமிட்டது சரியான முடிவு என்று நான் நம்புகிறேன். நியாயமாகச் சொல்வதானால், பெங்களூரில் நடந்த இரண்டாவது இன்னிங்ஸில் (முதல் டெஸ்ட்) இந்தியா 400 ரன்களுக்கு மேல் எடுத்தனர்.