இந்தியாவில் இந்தாண்டு அக்டோபர் 5ஆம் தேதி ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. அதன்பின் நேற்றைய தினம் அனைத்து அணிகளும் தங்களுடை உலகக்கோப்பை அணியை அரிவித்தனர்.
அதேசமயம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வீரராக விளையாடி வரும் விராட் கோலி பல்வேறு போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்துள்ளார்.
அதுமட்டுமின்றி அவரது ஆக்ரோஷமான அணுகுமுறை இந்திய அணியும் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றது. தற்போதுள்ள இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியிலும் விராட் கோலி சீனியர் வீரராக முன்னின்று சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஐசிசி கோப்பையை கைப்பற்றாமல் இருக்கும் இந்திய அணி இம்முறை ஒருநாள் உலகக் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.