ஐபிஎல் அணியை வழிநடத்தினால் மட்டும் போதாது - கவாஸ்கர் எச்சரிக்கை!
ஐபிஎல் தொடரில் கோப்பைகளை வென்றால் மட்டும் போதாது, சர்வதேச கிரிக்கெட்டிலும் அதனை சாதிக்க வேண்டும் என்று ரோஹித் சர்மாவிற்கு சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டி20 உலக கோப்பையுடன் இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி விலகிவிட்டார். அடுத்தாக நடக்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படவுள்ளார்.
விராட் கோலிக்கு பிறகு இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா தான் நியமிக்கப்படுவார் என்பது தெரிந்த விஷயம் தான் என்றாலும், நீண்டகால கேப்டனுக்கான நபராக கேஎல் ராகுல் இருப்பார் என்பதால் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அவரை கேப்டனாக நியமிக்கலாம் என்றெல்லாம் பேசப்பட்டது.
Trending
ஆனால் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன், இந்திய அணியை வெள்ளைப்பந்து போட்டிகளில் வழிநடத்த கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் சிறப்பாக பயன்படுத்தி அணியை அருமையாக வழிநடத்தி வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர் என்ற வகையிலும், கேப்டன்சி அனுபவத்தின் அடிப்படையிலும் ரோஹித் சர்மா தான் இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ், ரோஹித் சர்மாவின் கேப்டன்சியின் கீழ், இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடவுள்ளது. அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பையை மனதில் வைத்துத்தான், நீண்டகால தேர்வாக இல்லையென்றாலும் பரவாயில்லை என்று, ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பேற்றது குறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர், “இந்திய அணியை வழிநடத்த ரோஹித் சர்மா தயாராகவே இருக்கிறார். ரோஹித் சர்மாவின்கேப்டன்சியில் இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் புதிய அத்தியாதத்தை தொடங்குகிறது.
Also Read: T20 World Cup 2021
ரோஹித் சர்மா ஐபிஎல்லில் 5 முறை கோப்பையை வென்றிருக்கிறார். ஆனாலும் மாநில அணியையோ, லீக் அணிகளையோ வழிநடத்துவது வேறு; தேசிய அணியை வழிநடத்துவது வேறு. ஐபிஎல்லில் 5 முறை கோப்பையை வென்றதாலேயே, ஒருவர் சர்வதேச கிரிக்கெட்டிலும் வெற்றிகரமான கேப்டனாக ஜொலிப்பார் என்று உத்தரவாதம் கொடுக்க முடியாது” என்று எச்சரித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now