
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று சண்டிகரில் நடைபெற்றது. சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆர் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் மிக குறைந்த ஸ்கோரை டிபென்ட் செய்த முதல் அணி எனும் சாதனையையும் பஞ்சாப் கிங்ஸ் பெற்றுள்ளது. இதுதவிர்ந்து இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியானது 4அவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன் நடப்பு சீசன் புள்ளிப்பட்டியலிலும் 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேற்கொண்டு இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட யுஸ்வேந்திர சஹால் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் கேகேஆர் அணி தோல்வியைத் தழுவினாலும் அந்த அணியின் நட்சத்திர வீரர் சுனில் நரைன் சிறப்பு சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி இப்போடியில் சுனில் நரைன் 2 விக்கெட்ட்களை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். அவர் பஞ்சாப் கிங்ஸிற்கு எதிராக 36 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தை பிடித்துள்ளார்.