
உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 18ஆவது சீசன் நாளை (மார்ச் 22) முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது.
இத்தொடரில் நாளை நடைபெறவுள்ள முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து, ராஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இரு அணிகளிலும் நட்சத்திர பட்டாளங்கள் உள்ளதால் இதில் எந்த அணி வெற்றியைப் பதிவுசெய்து தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் ஆர்சிபி அணிகு எதிரான இந்த போட்டியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் சுனில் நரைன் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.