
Suresh Raina Asks Indian Players To Win The T20 World Cup For Virat Kohli (Image Source: Google)
டி20 உலகக்கோப்பையின் 7ஆவது சீசன் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் கோலாகலமாக தொடங்கியுள்ளது.
இதில் இன்று நடைபெற்றுவரும் முதல் போட்டியில் ஓமன் - பப்புவா நியூ கினியா அணிகள் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. அதேசமயம் நாளை நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.
இந்நிலையில், நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்திய கேப்டன் விராட் கோலி தனது கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இதனால் விராட் கோலிக்காக உலககோப்பையை வெல்ல வேண்டுமென முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா வேண்டுகோள் விடுத்துள்ளார்.