இந்திய அணியின் தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் களமிறங்குவார் - சூர்யகுமார் யாதவ்!
வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியில் தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் களமிறங்குவார் என்று அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது.அந்தவகையில், இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயன முதல் டி20 போட்டியானது குவாலியரில் உள்ள நியூ மாதவராவ் சிந்தியா கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்கள் தீவிரமாகி தயாராகி வருகின்றனர். மேற்கொண்டு இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. முன்னதாக, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது. அதனால் டி20 தொடரிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
Trending
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், இப்போட்டிக்கான அணியின் தொடக்க வீரர்கள் யார் யார் என்பது குறித்த தகவலை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இத்தொடருக்கான இந்திய அணியின் இரண்டாவது தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் தான். இத்தொடரில் அவர் அணியின் தொடக்க வீரராகவே விளையாடுவார்” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “அறிமுக வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ள மயங்க் யாதவிற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. நாம் பார்த்தது போல், அவர்கள் தங்கள் மாநிலங்கள் மற்றும் ஐபிஎல் அணிகளுக்காக சிறப்பாக விளையாடிவுள்ளனர். மேலும் அவர் தங்களது விளையாட்டில் தாக்கத்தை ஏற்படுத்த நிறைய திறன்களைக் கொண்டுள்ளனர். அதனால் அவர் நாளை அல்லது அடுத்த போட்டியில் விளையாடுவார் என்று நம்புகிறேன்.
மேலும் அவர் 150 கீமி வேகத்தில் பந்துவீசுவதால் அவரை எல்லோரும் அணியின் துருப்புச்சீட்டாக பார்க்கின்றனர். என்னைப் பொறுத்தவரையில் அணியில் உள்ள அனைத்து வீரர்களுமே அப்படிபட்டவர்கள் தான். அதேசமயம் நான் அவரை இதுவரை எதிர்கொள்ளவில்லை. ஆனால் அவர் என்ன செய்தார், அவருக்கு என்ன திறன் உள்ளது, அணிக்கு என்ன மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நான் பார்த்திருக்கிறேன். எனவே, அவரை இங்கே பார்ப்பது நல்லது” என்று தெரிவித்துள்ளார்.
Suryakumar Yadav confirms Sanju Samson will open with Abhishek Sharma #INDvBAN #India #TeamIndia #Bangladesh pic.twitter.com/VEg0OLKj6l
— CRICKETNMORE (@cricketnmore) October 5, 2024
முன்னதாக இத்தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த நட்சத்திர ஆல் ரவுண்டர் ஷிவம் தூபே காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேற்கொண்டு அவருக்கு மாற்றாக திலக் வர்மா இந்திய டி20 அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
இந்திய டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கே), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ரின்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, ஜிதேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ்.
Win Big, Make Your Cricket Tales Now