
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 17அவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முன்னேறியுள்ளன. இதையடுத்டு இரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி எதிர்வரும் 28ஆம் தேதி துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்வுள்ளது.
இந்த நிலையில் நடப்பு ஆசிய கோப்பை தொடரின் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றுகளில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டிகளில் சார்ச்சைகள் வெடித்தன. இதில் லீக் போட்டியின் போது இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணியுடன் கைக்குலுக்குவதை தவிர்த்தனர். அதனைத் தொடர்ந்து சூப்பர் 4 சுற்றின் போது பாகிஸ்தான் வீரர்கள் சாஹிப்சாதா ஃபர்ஹான், ஹாரிஸ் ராவுஃப் ஆகியோர் சைகையின் மூலம் ரசிகர்களை சீண்டினர்.
இதனையடுத்து சாஹிப்சாதா ஃபர்ஹான், ஹாரிஸ் ராவுஃப் ஆகியோர் குறித்து ஐசிசியிடம் பிசிசிஐ புகாரளித்தது. அதேசமயம் சூர்யகுமார் யாதவ் அரசியல் நோக்குடன் கருத்து தெரிவித்ததாக கூற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் புகாரளித்தது. இதனையடுத்து நேற்றைய தினம் சூர்யகுமார் யாதவும், இன்று சாஹிப்சாதா ஃபர்ஹான் மற்றும் ஹாரிஸ் ராவுஃப் ஆகியோரும் ஐசிசி விசாரணையை எதிர்கொண்டனர்.