Advertisement

சூர்யகுமாருக்கு அவசரப்பட்டு வாய்ப்பு கொடுக்கக் கூடாது - விரேந்திர சேவாக்!

சூர்யகுமார் ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் பெரிதாக சாதிக்கவில்லை என்பதால் அவசரப்பட்டு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று  முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் எச்சரித்துள்ளார்.

Advertisement
சூர்யகுமாருக்கு அவசரப்பட்டு வாய்ப்பு கொடுக்கக் கூடாது - விரேந்திர சேவாக்!
சூர்யகுமாருக்கு அவசரப்பட்டு வாய்ப்பு கொடுக்கக் கூடாது - விரேந்திர சேவாக்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 28, 2023 • 09:47 PM

ஆசிய கோப்பையில் வெற்றி பெற்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரையும் வென்று சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலகக் கோப்பையில் களமிறங்குவதற்கு தயாராகியுள்ளது. முன்னதாக இத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டது ஒரு தரப்பு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 28, 2023 • 09:47 PM

ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் அளவுக்கு எப்படி பந்து வீசினாலும் மைதானத்தின் 360 டிகிரியிலும் அடித்து நொறுக்கி பெரிய ரன்கள் குவிக்கும் அவர் இந்தியாவின் மேட்ச் வின்னராக உருவெடுத்து உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலிக்கிறார். ஆனால் சற்று பொறுமையுடன் விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே தடுமாறி வரும் அவர் இதுவரை ஒரு அரை சதம் கூட அடிக்காமல் கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டாகி மோசமான உலக சாதனை படைத்தார்.

Trending

இருப்பினும் அணி நிர்வாகத்தின் ஆதரவால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் 50, 72 ரன்கள் விளாசிய அவர் ஃபார்முக்கு திரும்பி ஒருநாள் கிரிக்கெட்டிலும் தம்மால் சாதிக்க முடியும் என்பதை காட்டினார். அதிலும் கடைசிக்கட்ட ஓவர்களில் வெளுத்து வாங்கிய அவர் 2023 உலகக்கோப்பையின் அனைத்து போட்டிகளிலும் முதல் வீரராக விளையாட வேண்டும் என்று ஹர்பஜன் சிங் சமீபத்தில் கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில் சூர்யகுமார் ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் பெரிதாக சாதிக்கவில்லை என்பதால் அவசரப்பட்டு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று  முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் எச்சரித்துள்ளார். மேலும் ஃபினிஷிங் வேலையை இஷான், பாண்டியா, ஜடேஜா போன்ற மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களே செய்யக்கூடிய திறமையை கொண்டிருப்பதாக தெரித்துள்ளார்.

இதுகுற்த்து பேசிய அவர், “ஒருநாள் கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் இன்னும் பெரிதாக எதுவும் செய்யவில்லை. குறிப்பாக கடைசிக்கட்ட 15 – 20 ஓவர்களில் கிட்டத்தட்ட டி20 போட்டிக்கு நிகரான சூழ்நிலைகளை பயன்படுத்தி அவரால் அதிரடியாக விளையாட முடிகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே வேலையை ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், கேஎல் ராகுல் ஆகியோரும் செய்யும் திறமையை கொண்டுள்ளனர். எனவே 4ஆது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுவது உறுதியாகியுள்ள இந்த சூழ்நிலையில் சூர்யகுமார் யாதவ் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும். 

ஒருவேளை 4ஆவது இடத்தில் விளையாடுவதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்தால் சதமடித்து அங்கேயும் தம்மால் சாதிக்க முடியும் என்பதை அவர் அணி நிர்வாகத்திற்கு காட்ட வேண்டும். எனவே தற்போதைக்கு அவர் அணியில் பொருந்த மாட்டார். ஒருவேளை தேவைப்பட்டால் 4ஆவது இடத்தில் இஷான் கிஷன் இடது கை வீரராக இருப்பதால் தேர்வு செய்யப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement