
ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 69ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி ஆபார வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியதுடன், முதல் குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். அதேசமயம் இப்போட்டியில் தோல்வியைத் தழுவிய மும்பை இந்தியன்ஸ் அணி எலிமினேட்டர் சுற்றில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதன்படி இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய சூர்யகுமார் யாதவ், டி20 கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிகமுறை 25+ ரன்களை வீரர் எனும் டெம்பா பவுமா சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். முன்னதாக தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா 2019-20ஆம் ஆண்டி தொடர்ச்சியாக 13 முறை 25+ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது சூர்யகுமார் யாதவ் 14 முறை 25+ ரன்களை கடந்து அந்த சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார்.