இந்தியாவில் ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியை நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த நிலையில் இன்று பாகிஸ்தான் அணி, நெதர்லாந்து அணியை ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் சந்தித்து விளையாடி வருகிறது.
நேற்று நியூசிலாந்து போலவே இன்று நெதர்லாந்து எதிர்பார்ப்புக்கு மாறாக சிறப்பாகவே செயல்படுகிறது. இந்திய அணி நாளை மறுநாள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ள இருக்கிறது. கொஞ்சம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானம் என்பதால் இந்திய அணியில் யார் இடம்பெறுவார்கள்? என்பது குறித்து சுவாரசியமான எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தற்போது இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் அனைவருமே சிறந்த பார்மில் இருக்கிறார்கள். மேலும் வாய்ப்பு பெற்ற பந்துவீச்சாளர்களும் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இதன் காரணமாக அணியில் யாருக்கு வாய்ப்பு தருவது? என்கின்ற நல்ல குழப்பம் நிலவி வருகிறது.