
ஐபிஎல் தொடரில் நேற்று மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் சிறப்பு சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதன்படி இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 9 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 300 ஸ்ட்ரைக் ரேட்டில் 27 ரன்கள் எடுத்தது அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இந்நிலையில் இப்போட்டியில் அவர் 20 ரன்களைச் சேர்ததத மூலம் டி20 கிரிக்கெட்டில் 8000 ரன்களையும் பூர்த்தி செய்து அசத்தியுள்ளார். இதன் மூலம் இந்திய அணிக்காக இந்த மைல் கல்லை எட்டிய 5ஆவது வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார்.
இதற்கு முன் இந்திய அணிக்காக விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் மட்டுமே டி20 கிரிக்கெட்டில் 8ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார். சூர்யகுமார் யாதவின் டி20 கெரியரைப் பொறுத்தமட்டில் ஒட்டுமொத்தமாக இதுவரை 312 போட்டிகளில் 288 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் 34.21 என்ற ஸ்டிரைக் ரெட்டில் 8007 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.