
கடந்த ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர், சர்வதேச டி20 தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த வீரர் போன்ற பெருமையை பெற்றவர் சூர்யகுமார் யாதவ். இதன் மூலம் , இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் என்ற அந்தஸ்து சூர்யகுமார் யாதவ்க்கு கிடைத்தது. தற்போது புத்தாண்டிலும் சூர்யகுமார் அதே ஃபார்மை தொடர்ந்தார்.
முதல் டி20 போட்டியில் 7 ரன்களில் ஆட்டமிழந்த சூர்யகுமார், 2ஆஅவது டி20 போட்டியில் அரைசதம் கடந்தார். தற்போது 3ஆவது டி20 போட்டியில் 45 பந்துகளில் சதம் விளாசினார்.
இது குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ், “கடந்த ஆண்டு விளையாடியது, கடந்த ஆண்டிலேயே போய்விட்டது. தற்போது புதிய ஆண்டு, மீண்டும் புதியதாக ரன் சேர்க்க வேண்டும். நான் கடந்த ஒரு ஆண்டாக எந்த ஷாட்களை விளையாடினேனோ, அதே ஷாட்டை தான் இன்றும் விளையாடினேன். என்னுடைய ஸ்பெஷல் ஷாட்களை தொடர்ந்து பயிற்சி செய்தேன். பந்துவீச்சாளர்கள் பந்தை வீசும் முன்னே, அதனை யூகித்து என்னுடைய ஷாட்டை தேர்வு செய்து ஆடுவேன்” என்று தெரிவித்தார்.