
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி நேற்று லக்னோவில் நடந்தது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, 100 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்ட இந்திய அணியில் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
சுப்மன் கில் (11), இஷான் கிஷான் (19), ராகுல் திரிபாதி (13) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதையடுத்து வாஷிங்டன் சுந்தர் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் ஜோடி சேர்ந்து ஆடினர். ஒரு கட்டத்தில் ரன் எடுக்க ஓடி வந்த நிலையில், மறுமுனையில் நின்றிருந்த வாஷிங்டன் சுந்தர் வர வேண்டும் என்று மறுத்தார்.
ஆனால், அதையும் மீறி சூர்யகுமார் யாதவ் ஓடி வர அவரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வாஷிங்டன் சுந்தர் கிரீஸை விட்டு வெளியில் வந்து அவுட்டானார். அதன் பிறகு சூர்யகுமார் யாதவ்வுடன் இணைந்த ஹர்திக் பாண்டியா இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியாக இந்திய அணி 19.5 ஓவரில் 4 விக்கெட் இழந்து 101 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.