
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணி சமீபத்தில்அறிவிக்கப்பட்டது. இதில் அணியின் கேப்டனாக ரோஹித் சரமா நீடிக்கும் நிலையில், அணியின் துணைக்கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன், கருண் நாயர், வருண் சக்ர்வர்த்தி உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேபோல் இந்திய டி20 அணி கேப்டன் சூர்யகுமார் யாதவும் ஒருநால் அணியில் இடம்பெறவில்லை.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இடம்பெறாத நிலையில், ஒருநாள் போட்டிகளில் சரியாக விளையாட முடியாதது வருத்தமளிப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாதது எனக்கு ஏன் வருத்தமளிக்க வேண்டும். நான் சரியாக விளையாடியிருந்தால், இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடித்திருப்பேன்.