Advertisement

ரோஹித்திற்கு ஆதரவாக பதிவிட்ட சூர்யகுமார் யாதவ்; மும்பை இந்தியன்ஸில் முற்றும் மோதல்!

ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நீக்கியது தமது இதயத்தை உடைக்கும் நிகழ்வாக அமைந்திருக்கிறது என அந்த அணி வீரர் சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 16, 2023 • 12:17 PM
ரோஹித்திற்கு ஆதரவாக பதிவிட்ட சூர்யகுமார் யாதவ்; மும்பை இந்தியன்ஸில் முற்றும் மோதல்!
ரோஹித்திற்கு ஆதரவாக பதிவிட்ட சூர்யகுமார் யாதவ்; மும்பை இந்தியன்ஸில் முற்றும் மோதல்! (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் 17ஆவது சீசன் தொடங்குவதற்கு முன்பாக இந்த வருடத்தின் இறுதியிலேயே ஐபிஎல் களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. குறிப்பாக ஏலம் நடப்பதற்கு முன்பாகவே, ஏலத்தை விட தீவிரமான விஷயங்கள் நடைபெற்ற முடிந்துள்ளன. இப்படி நடைபெற்ற எல்லா விஷயங்களுக்கும் மையமாக மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே இருந்து வருகிறது. இந்த அணியை சுற்றி நிறைய விவாதங்கள் தற்பொழுது போய்க்கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிய அணியாக உள்ளே வந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியாவை நேரடியாக அந்த அணி நிர்வாகம் கேப்டன் ஆக்கியது. மேலும் சிறந்த பயிற்சியாளர்கள் மற்றும் சிறந்த வீரர்களை உள்ளடக்கிய குழுவைக் கொண்டு, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் சீசனில் கோப்பையை வென்று அசத்தியது. 

Trending


அதன்பின் இந்த வருடம் இரண்டாவது சீசனில் இறுதிப் போட்டிக்கும் வந்தது. ஹர்திக் பாண்டியா வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இருந்தார். இந்நிலையில்தான் யாரும் எதிர்பாராத விதமாக, தனக்கு புதிதாய் உருவாகி இருந்த சிறப்பான அடையாளத்தை விட்டு, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா டிரேடிங் செய்யப்பட்டார். அவரது இந்த முடிவு பலரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது.

மேலும் அதிர்ச்சிப்படுத்தும் நிகழ்வாக மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டன் ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, அவருடைய இடத்தில் ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நேற்று அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியிலும், இந்திய அணியிலும் கேப்டன் ரோஹித் சர்மா கீழ் விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடைந்த இதய புகைப்படம் ஒன்றை பதிவேற்றி இருக்கிறார்.

 

ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நீக்கியது தமது இதயத்தை உடைக்கும் நிகழ்வாக அமைந்திருக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். மேலும் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா வருகையில் அவருக்கு விருப்பம் இல்லை என்பதும் வெளிப்படையாகவே தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement