
உலகக் கோப்பைக்கு முன்பாக இந்தியாவில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதிக்கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி நேற்று பஞ்சாப் மாநிலம் மொகாலி மைதானத்தில் நடைபெற்றது. மேலும் இங்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெற்று 27 வருடங்கள் ஆகிறது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா பந்துவீச்சு பேட்டிங் என இரண்டிலும் மிகச் சிறப்பாக வெற்றி பெற்று 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது. நேற்றைய போட்டியில் இந்திய அணியின் உலகக் கோப்பை திட்டத்தில் இல்லாத ருதுராஜ் தொடக்க வீரராக வந்து அரை சதம் அடித்து அசத்தினார். அவருக்கு இது ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் அரை சதம் ஆகும்.
மேலும் மிக முக்கியமாக சூர்யகுமார் யாதவ் நேற்று மிக முக்கியமான நேரத்தில் கேஎல் ராகுலுடன் இணைந்து 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இந்தப் பார்ட்னர்ஷிப்தான் ஆட்டத்தை எளிதாக வெல்வதற்கு உதவியது. அவருக்கு அடுத்து அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவர் மட்டுமே இருந்தார்கள். நேற்றைய போட்டியில் அவர் தனது பழைய அணுகுமுறையை மாற்றிக்கொண்டு மிகவும் புத்திசாலித்தனமாகவும் பொறுமையாகவும் விளையாடினார். அதே சமயத்தில் ரன்களும் வந்தது.