
இந்திய அணியின் அதிரடி நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ். இந்த ஆண்டு டி20 போட்டிகளில் சூர்யகுமார் அற்புதமான ஃபார்மில் உள்ளார். இந்த ஆண்டு 31 T20I போட்டிகளில், அவர் 46.56 சராசரியில் 1,164 ரன்கள் எடுத்துள்ளார். இரண்டு சதங்கள் மற்றும் 9 அரைசதங்கள் என கலக்கி வரும் சூர்யகுமாரால், ஒருநாள் கிரிக்கெட்டில் அதே போன்ற ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
சூர்யகுமார் யாதவால் நடப்பாண்டு, 13 ஒருநாள் போட்டிகளில் 26.00 சராசரியில் 260 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் ஒரு அரை சதம் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால் முதல்தர டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான சாதனை படைத்துள்ளார். 77 போட்டிகள் மற்றும் 129 இன்னிங்ஸ்களில் 44.01 சராசரியுடன் 5,326 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவர் 14 சதங்கள் மற்றும் 26 அரை சதங்கள் அடங்கும்.
இதில் அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 200 ரன்கள் ஆகும். இந்த நிலையில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தமக்கு வாய்பபு வழங்கப்படும் என்று சூர்யகுமார் யாதவ் நம்பினார். ஆனால் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இடம்பெறவில்லை. இதனையடுத்து சூர்யகுமார் யாதவ் அதிரடி முடிவை எடுத்துள்ளார்.