
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை மகளிர் அணி தற்சமயம் மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை மகளிர் அணிக்கு கேப்டன் சமாரி அத்தபத்து - விஷ்மி குணரத்னே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குணரத்னே ரன்கள் ஏதுமின்றி விக்கட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹர்ஷிதா மாதவியும் 11 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் சமாரி அத்தபத்து 23 ரன்களுக்கும், கவிஷா தில்ஹாரி 12 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த மானுடி நாணயக்கார - நிலாக்ஷி டி சில்வா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் மானுடி நாணயக்கார 35 ரன்களில் ஆட்டமிழக்க, நிலாக்ஷி டி சில்வாவும் 20 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளும் சோபிக்க தவற, இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களை மட்டுமே சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் பிரீ இல்லிங், ஜெஸ் கெர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.