
Syed Mushtaq Ali Trophy 2022: World Cup star Vijay Shankar dropped, Baba Aparajith set to lead Tamil (Image Source: Google)
2022 சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டி அக்டோபர் 11 முதல் தொடங்குகிறது. இப்போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணியின் கேப்டனாக இருந்த விஜய் சங்கர் இம்முறை நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக பாபா அபரஜித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டியில் ஏற்பட்ட காயத்தால் முழு உடற்தகுதியை இன்னும் அடையாமல் உள்ளார் விஜய் சங்கர். இதன் காரணமாக அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
வாஷிங்டன் சுந்தர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் நடராஜனும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆச்சர்யம் தரும் விதமாக 6 சர்வதேச டி20, 42 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள 31 வயது வருண் சக்ரவர்த்தி முதல்முறையாகத் தமிழக அணிக்காக விளையாடவுள்ளார்.