Advertisement

டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் உம்ரான் மாலிக்!

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் வலைபயிற்சி பந்துவீச்சாளராக உம்ரான் மாலிக் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan October 10, 2021 • 11:10 AM
T-20 World Cup: No Change In India Squad Unless There Is An Injury; Umran Malik Picked As Net Bowler
T-20 World Cup: No Change In India Squad Unless There Is An Injury; Umran Malik Picked As Net Bowler (Image Source: Google)
Advertisement

ஜம்மு காஷ்மீரின் இளம் வேகப்பந்து வீச்சாளர் 21 வயதான உம்ரான் மாலிக். இளம் வேகப்பந்து வீச்சாளரான இவர் நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினார்.

மேலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக 3 போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வெறும் 3 போட்டிகளில் பங்கேற்றாலும் மணிக்கு 150 கிமீ வேகத்தில் தொடர்ந்து பந்து வீசி பலரது கவனத்தை ஈர்த்தார். இவரது திறமையைக் கண்டு விராட் கோலியும் வெகுவாக பாராட்டினார். 

Trending


இந்நிலையில் நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடரானது அக்டோபர் 17ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணியின் வலைபயிற்சி பந்துவீச்சாளராக உம்ரான் மாலிக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

நடப்பு ஐபிஎல் சீசனில் 153 கி.மீ. வேகத்தில் பந்து வீசி அதிவேகமாக பந்துவீசியவர்களின் பட்டியலில் உம்ரான் மாலிக் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement