
T10 League: Bangla Tigers beat Team Abu Dhabi by 10 runs (Image Source: Google)
டி10 லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் டீம் அபுதாபி - பங்களா டைகர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற அபுதாபி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பங்களா டைகர்ஸ் அணி ஹஸ்ரதுல்லா ஸஸாய் , வில் ஜேக்ஸ் ஆகியோரது அதிரடியான பேட்டிங்கால் 10 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் 43 ரன்களையும், ஹஸ்ரதுல்லா ஸஸாய் 41 ரன்களையும் சேர்த்தனர்.