
T10 League: Deccan Gladiators beat Delhi Bulls by 9 wickets (Image Source: Google)
அபுதாபியில் நடைபெற்று வரும் டி10 கிரிக்கெட் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் - டெல்லி புல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி புல்ஸ் அணிக்கு ரொஸ்ஸோவ் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். ஆனால் மற்ற வீரர்கள் சரிவர சோபிக்க தவறினர்.
இதனால் 10 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்களை மட்டுமே சேர்த்தது. டெக்கான் அணி தரப்பில் ஆண்ட்ரே ரஸ்ஸல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.