டி20 பிளாஸ்ட்: சாம் கரண் பந்துவீச்சில் சர்ரே அணி வெற்றி!
இங்கிலாந்தில் நடக்கும் மிகப்பெரிய டி20 போட்டியான டி20 பிளாஸ்ட் போட்டியில் சாம் கரண் சிறப்பாக விளையாடி வருகிறார்.
ஐபிஎல் தொடரைப் போலவே இங்கிலாந்தில் நடத்தப்படும் டி20 கிரிக்கெட் தொடர் வைட்டாலிட்டி டி20 பிளாஸ்ட். சர்ரே அணிக்காக சாம் கரண் விளையாடி வருகிறார். காயம் காரணமாக இந்த ஐபிஎல்-இல் கலந்துக் கொள்ளவில்லை. அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நன்றாக விளையாடி அதன்பிறகு இங்கிலாந்து அணியில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றையப் போட்டியில் சர்ரே அணி குளோசெஸ்டர்ஷைர் அணியுடன் மோதியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய சர்ரே அணி 15 ஓவர்களில் 129 ரன்களில் ஆட்டமிழந்தது. சாம் கரண் 2 பந்துகளில் 6 ரன்கள், வில் ஜேக்ஸ் 51, ஜேசன் ராய் 28, பொலார்ட் 14 ரன்களும் எடுத்திருந்தனர். கேப்டன் கிரிஸ் ஜார்டன் 5 ரன்களும் எடுத்திருந்தார்.
Trending
அடுத்து ஆடிய குளோசெஸ்டர்ஷைர் அணி 15 ஓவர்களில் 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் கேப்டன் ஜாக் டைலர் 10, டாம் ஸ்மித் 14, ரியான் ஹிக்கின்ஸ் 37 ரன்களும் எடுத்தனர். மற்ற அனைவரும் ஒரு இலக்க ரன்களே எடுத்தனர். சர்ரே அணி சார்பில் பொலார்டு, சுனில் நரேன், ஜார்டன், டேனியல் தலா 1 விக்கெட் எடுத்தனர். டாப்ளே 2 விக்கெட்டுகள் எடுத்தார். சாம் கரண் 3 ஓவர்களில் 14 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.
இந்த டி20யில் மொத்தம் 18 அணிகள் பங்கேற்கும். 9 அணிகளாக வடக்கு மற்றும் தெற்கு அணிகளாக பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு அணியும் 14 போட்டிகள் விளையாடும். இரண்டிலும் முதல் 4 இடங்களைப் பெறும் 8 அணிகள் காலிறுதியில் மோதும். பின்னர் அதில் வெற்றி பெறும் 4 அணிகள் அரையிறுதிக்கு தேர்வாகும். அதில் வெற்றி பெறும் 2 அணிகள் இறுதி சுற்றுக்குத் தேர்வகும். அதில் வெற்றி பெறும் அணியே சேம்பியன்ஷிப் பட்டம் பெறும். 2003லிருந்து இப்போட்டிகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now