
T20 Ranking: Suryakumar Yadav overtakes Babar Azam in T20I rankings (Image Source: Google)
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியின் வீரர்களின் புதிய தரவரிசைபட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் (861 புள்ளி) நம்பர் ஒன் இடத்தில் நீடிக்கிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் 69 ரன்கள் விளாசிய இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் இப்பாட்டியளில் 801 புள்ளிகள் பெற்று ஒரு இடம் முன்னேறி மீண்டும் 2ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 799 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளார். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒரு இடம் உயர்ந்து 13ஆவது இடத்தையும், விராட் கோலி 15ஆவது இடத்தையும், கேஎல் ராகுல் 4 இடம் சறுக்கி 22ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.