
T20 WC 15th Match: Rahim, Naim's fifty helps Bangladesh post a total on 171 (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரின் 15ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்கதேச அனிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் 16 ரன்னிலும், அவரைத் தொடர்ந்து வந்த ஷாகிப் அல் ஹசன் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த முகமது நைம் - முஷ்பிக்கூர் ரஹிம் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர்.