Advertisement
Advertisement
Advertisement

டி20 உலகக்கோப்பை தொடரில் யுவராஜ் சிங் சாதனையை சமன் செய்த நிக்கோலஸ் பூரன்!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் ஒரே ஓவரில் 36 ரன்களை விளாசிய வீரர் எனும் யுவராஜ் சிங்கின் சாதனையை நிக்கோலஸ் பூரன் சமன்செய்துள்ளார்.

Advertisement
டி20 உலகக்கோப்பை தொடரில் யுவராஜ் சிங் சாதனையை சமன் செய்த நிக்கோலஸ் பூரன்!
டி20 உலகக்கோப்பை தொடரில் யுவராஜ் சிங் சாதனையை சமன் செய்த நிக்கோலஸ் பூரன்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 18, 2024 • 08:22 AM

விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை அடத்தின. செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சாமி தேசிய மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து விண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 18, 2024 • 08:22 AM

அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது தொடக்கத்திலேயே பிராண்டன் கிங்கின் விக்கெட்டை இழந்தாலும், அடுத்து களமிறங்கிய வீரர்களின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிக்ஸர் மழை பொழிந்தனர். அதிலும் குறிப்பாக அணியின் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 6 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 98 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். 

Trending

அவருக்கு துணையாக விளையாடிய ஜான்சன் சார்லஸ் 43 ரன்களையும், ஷாய் ஹோப் 25 ரன்களையும், கேப்டன் ரோவ்மன் பாவெல் 26 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்களைக் குவித்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய குல்பதீன் நைப் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இந்நிலையில் இப்போட்டியில் நிக்கோலஸ் பூரன் ஒரே ஓவரில் 36 ரன்களை விளாசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் சாதனையை சமன் செய்து அசத்தியுள்ளார். அதன்படி கடந்த 2007ஆம் ஆண்டி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி 36 ரன்களை அடித்திருந்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்து வந்தது. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

இந்நிலையில் இன்றைய போட்டியில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரனும் 36 ரன்களைச் சேர்த்து அச்சாதனையை சமன் செய்துள்ளார். அதன்படி அஸ்மதுல்லா ஒமர்ஸாய் வீசிய இன்னிங்ஸின் நான்காவது ஓவரில் நிக்கோலஸ் பூரன் இச்சாதனையை படைத்துள்ளார். இந்நிலையில், ஒரே ஓவரில் நிக்கோலஸ் பூரன் 36 ரன்களை குவித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement