ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, அரையிறுதி 2 - இங்கிலாந்தை பழிதீர்க்குமா இந்தியா?- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் மற்றும் ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. இதில் இன்று நடைபெற்று முடிந்த முதலாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியானது 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி, முதல் முறையாக டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. கடந்த முறை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியானது அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிகுள் நுழைந்ததுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதித்தது. இதனால் கடந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய அணி இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால் இப்போட்டியின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
Trending
இந்திய அணி
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இதுவரை தோல்வியே சந்திக்காமல், சூப்பர் 8 சுற்றிலும் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று தற்போது அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இதனால் இம்முறை ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. அதற்கேற்றவகையில் கடந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் தனது பழைய ஃபார்மிற்கு திரும்பியுள்ளது அணிக்கு கூடுதல் நம்பிக்கையை வழங்கியுள்ளது.
அதேசமயம் மற்றொரு நட்சத்திர வீரரான விராட் கோலி இதுவரை இந்த தொடரில் பெரிதளவில் ரன்களைச் சேர்க்காமல் இருப்பது அணிக்கு பெரும் பின்னடவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்கள் தேவைப்படும் நேரங்களில் சிறப்பாக செயல்பட்டு வருவது அணிக்கு நம்பிக்கையை அதிகரித்துள்ளது. மேலும் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஜஸ்ப்ரித் பும்ரா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு பலம் சேர்க்கும் விசயமாக பார்க்கப்படுகிறது.
இந்தியா உத்தேச லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்ஸர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா
இங்கிலாந்து அணி
மறுபக்கம் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கிய ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி லீக் சுற்றில் முட்டிமோதி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய நிலையில், தற்போது அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் அந்த அணி ஒரு சில போட்டிகளைத் தவிர்த்து மற்ற போட்டிகளில் பெரிதளவில் சோபிக்க தவறியது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இருப்பினும் தற்போது சூப்பர் 8 சுற்றில் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் நிச்சயம், அந்த அணி அரையிறுதி போட்டியிலும் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.
இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் கேப்டன் ஜோஸ் பட்லர், பில் சால்ட், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் அதிரடியான ஃபார்மில் உள்ளது அணிக்கு நம்பிக்கையை அளித்தாலும், மிடில் ஆர்டரில் மொயீன் அலி, ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன் உள்ளிட்ட வீரர்களிடம் இருந்து இதுவரை பெரிதளவிலான ஆட்டம் வெளிவராதது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஆதில் ரஷித் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தி வரும் நிலையில், அவர்களுடன் கடந்த போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய கிறிஸ் ஜோர்டனும் அணியில் இருப்பது கூடுதல் நம்பிக்கை அளிக்கும் விசயமாக பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து உத்தேச லெவன்: பிலிப் சால்ட், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், மொயின் அலி, ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரண், கிறிஸ் ஜோர்டான், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷித், ரீஸ் டாப்லி
IND vs ENG Dream11 Team
விக்கெட் கீப்பர்கள்: ஜோஸ் பட்லர், பில் சால்ட்
பேட்டர்ஸ்: சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா, விராட் கோலி
ஆல்ரவுண்டர்கள்: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), மொயீன் அலி (துணை கேப்டன்), சாம் கரண்
பந்துவீச்சாளர்கள்: ஆதில் ரஷித், குல்தீப் யாதவ், ஜோஃப்ரா ஆர்ச்சர்
Win Big, Make Your Cricket Tales Now