T20 WC 2024, Super 8: விண்டீஸை 135 ரன்களில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 136 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி பலப்பரீட்சை நடத்ததியது. ஆண்டிகுவாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கைல் மேய்ஸ் - ஷாய் ஹோப் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் ஷாய் ஹோப் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் இணைந்த கைல் மேயர்ஸ் - ரோஸ்டன் சேஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். அதன்பின் அரைசதம் அடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கைல் மேயர்ஸ் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 35 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
Trending
பின்னர் களமிறங்கிய கேப்டன் ரோவ்மன் பாவெல் ஒரு ரன்னிலும், ரூதர்ஃபோர்ட் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்திருந்த ரோஸ்டன் சேஸ் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 52 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 97 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் களமிறங்கிய ஆண்ட்ரே ரஸல் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்ட நிலையில் 15 ரன்களை மட்டுமே எடுத்த தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து அகீல் ஹொசைனும் 6 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அல்ஸாரி ஜோசப் 11 ரன்களையும், குடகேஷ் மோட்டி 4 ரன்களையும் சேர்க்க வெஸ்ட் இண்டீஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்களை சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தப்ரைஸ் ஷம்ஸி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி விளையாடவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now