அபாரமான கேட்சை பிடித்த சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்; ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் நெதர்லாந்து வீரர் சைப்ரண்ட் ஏங்கெல்பிரெக்ட் பிடித்த் கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் இன்று நடைபெற்ற 27ஆவது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
செயின்ட் வின்செண்டில் உள்ள அர்னோஸ் வாலெ மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பெட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு தன்ஸித் ஹசன் மற்றும் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ இணை தொடக்கம் கொடுத்தனர்.
Trending
இதில் நஜ்முல் சாண்டோ ஒரு ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய லிட்டன் தாஸும் ஒரு ரன்னுடம் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனையடுத்து இணைந்த தன்ஸித் ஹசன் மற்றும் ஷாகில் அல் ஹசன் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசித்தள்ளினர். இதன்மூலம் வங்கதேச அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்களைக் குவித்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் அதிரடியாக விளையாட முயற்சித்த லிட்டன் தாஸ், சைப்ரண்ட் ஏங்கெல்பிரெக்ட்டின் அபாரமான கேட்ச்சின் மூலம் விக்கை இழந்தனர். அதன்படி ஆர்யன் தத் வீசிய நான்காவது ஓவரின் முதல் பந்தையே லிட்டன் தாஸ் சிக்ஸர் அடிக்க முயற்சித்து தூக்கி அடித்தார். ஆனால் பந்தில் எதிர்பார்த்த வேகம் இல்லாததால் அது சிக்ஸருக்கு செல்லாமல் பவுண்டரி எல்லை அருகே மட்டுமே சென்றது.
அப்போது அத்திசையில் ஃபீல்டிங் செய்துவந்த சைப்ரண்ட் ஏங்கெல்பிரெக்ட் ஓடி வந்து டைவ் அடித்ததுடன், பந்தையும் கேட்ச் பிடித்து அசத்தினார். இதன் காரணமாக லிட்டன் தாஸ் ஒரு ரன்னும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இந்நிலையில் சைப்ரண்ட் ஏங்கெல்பிரெக்ட் பவுண்டரி எல்லையில் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now