
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது பதிப்பு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 20 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் லீன் சூற்று போட்டிகள் நிறைவடைய உள்ள நிலையில் எந்த 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன, நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களில் நீடித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக இரு அணிகளும் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றியைப் பதிவுசெய்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளின் கணிப்பட்ட பிளேயிங் லெவன் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
இந்திய அணி
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நடப்பு சீசனில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக இவ்விரு வெற்றியையும் பேட்டிங்கிற்கு கடினமான நசாவ் கவுண்டி சர்வதேச மைதானத்திலே பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த மைதானத்திலேயே தங்களது மூன்றாவது லீக் போட்டியிலும் இன்று விளையாட உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்ற உத்வேகத்துடன் இப்போட்டியில் விளையாடவுள்ளது.