
T20 WC 38th Match: West Indies finishes off 157 runs of their 20 overs (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்றுவரும் 38ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் கிறிஸ் கெயில் 15 ரன்னிலும், எவின் லூயிஸ் 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், ரோஸ்டன் சேஸ், ஹெட்மையர் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் பொல்லார்ட் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.