
T20 WC 42nd Match: India beat Namibia by 9 wickets (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றின் கடைசிப் போட்டி இன்று நடைபெற்றுவருகிறது. இதில் இந்தியா - நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய நமீபியா அணி அஸ்வின், ஜடேஜா ஆகியோரது பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.