
T20 WC: India Team to play practice match against England and Australia! (Image Source: Google)
இந்தியாவில் நடத்தப்பட இருந்த ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதிவரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ளது.
இதில் இந்திய அணி அக்டோபர் 14ஆம் தேதியன்று பாகிஸ்தான் அணியுடன் முதல் போட்டியை விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணி, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணியுடன் பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.