
T20 WC: Only Pakistan can stop England at this stage, says Michael Vaughan (Image Source: Google)
டி20 உலகக் கோப்பைப் தொடரின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-1 பிரிவில் இடம்பெற்ற இங்கிலாந்து அணியும், குரூப்-2 பிரிவில்இடம்பெற்ற பாகிஸ்தான் அணியும் மட்டும்தான் இதுவரை தோல்விகளைச் சந்திக்காமல் உள்ளன. மற்ற அனைத்து அணிகளையும் அடித்து துவம்சம் செய்து அபாரமான வெற்றிகளைப் பெற்றுள்ளன.
இங்கிலாந்து அணி தான் மோதிய வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது. அதேபோல இந்தியா,நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளை வென்று பாகிஸ்தான் வலிமையுடன் இருக்கிறது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் அசுரத்தனமான ஃபார்மைத் தடுத்து நிறுத்த பாகிஸ்தான் அணியால் மட்டும்தான் முடியும் என மைக்கேல் வான் கணித்துள்ளார்.