
இது எப்படி நிகழ்ந்தது என்று எனக்கு தெரியவில்லை - விராட் கோலி (Image Source: Google)
டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.
160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து கடைசி ஓவரின் கடைசி பந்தில் வெற்றி இலக்கான 160 ரன்களை எட்டியது. இதன் மூலம் பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா திரில் வெற்றிபெற்றது.
இந்நிலையில், சிறப்பாக விளையாடி 53 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 82 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.