
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 30ஆவது போட்டியில் இந்திய அணியும், தென் ஆப்ரிக்கா அணியும் மோதின. ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 68 ரன்கள் எடுத்து கொடுத்தார், மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் குவிக்கவில்லை. தென் ஆப்ரிக்கா அணி சார்பில் அதிகபட்சமாக லுங்கி நிகிடி 4 விக்கெட்டுகளையும், பர்னல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்பின் 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு டி காக் , டெம்பா பவுமா, ருச்சோவ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்தனர். இதன்பின் கூட்டணி சேர்ந்த டேவிட் மில்லர் – மார்கர்ம் ஜோடி, இந்திய அணியின் பந்துவீச்சை இலகுவாக எதிர்கொண்டு தேவைக்கு ஏற்ப ரன்னும் சேர்த்தது.