
T20 World Cup 2022: A comprehensive performance in Hobart sees them knocking West Indies out of the (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் குரூப் பி பிரிவில் இன்று வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கைய்ல் மேயர் 1 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான ஜான்சன் சார்லஸ் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேலும் எவின் லிவிஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் இருவரும் தலா 13 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
சிறப்பாக விளையாடிய பிராண்டன் கிங் இறுதி வரை அவுட்டாகாமல் 48 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து அணிக்கு பலம் சேர்த்தார். ஓடின் ஸ்மித்தும் அவுட்டாகாமல் 19 ரன்களுடன் களத்தில் இருந்தார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது.